நியூயார்க் வானில் மர்ம ஒளி – UFO அல்ல, Vulcan Centaur ராக்கெட்டின் அதிசயம்!

 நியூயார்க் வானில் தோன்றிய மர்ம ஒளி – UFO அல்ல, விண்வெளி தொழில்நுட்ப அதிசயம்!

வானத்தை கவர்ந்த ஒளிக்கதிர்

    2025 ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு, அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் மற்றும் குறிப்பாக Finger Lakes பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், வானில் ஒரு பிரகாசமான, மஞ்சள்-நீல நிற pill-shaped போன்ற ஒளி மிதந்து சென்றது. அதன் சுற்றிலும் பனித்தூவி போல ஒரு மங்கலான வெளிச்ச வளையம் இருந்ததால், பலர் இதை UFO (Unidentified Flying Object) என்று கருதினர்.

    மேலும், அந்த நாளில் Perseid meteor shower நடந்து கொண்டிருந்ததால், “இது விண்கல் விழுந்த ஒளியா?” என்ற யூகமும் பலரிடம் எழுந்தது.


உண்மையில் என்ன நடந்தது?

   ஆனால் நாசா மற்றும் வானியலாளர் விளக்கப்படி, இது அந்நிய கிரக வாகனம் அல்ல. இது United Launch Alliance (ULA) நிறுவனம் புளோரிடா, கேப் கனவரல் (Cape Canaveral) விண்ணில் அனுப்பிய Vulcan Centaur ராக்கெட் தான்.

   இந்த ராக்கெட் USSF-106 எனும் அமெரிக்க விண்வெளிப் படை (US Space Force) மிஷனின் ஒரு பகுதியாக, Navigation Technology Satellite-3 (NTS-3) என்ற பரிசோதனை செயற்கைக்கோளை geosynchronous orbit-க்கு கொண்டு சென்றது.

‘Twilight Phenomenon’ – ஏன் இவ்வளவு பிரகாசம்?

   ராக்கெட் புறப்பட்ட சில நிமிடங்களில், அது வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளில் சூரிய வெளிச்சம் இன்னும் படரும் உயரத்திற்கு சென்றுவிடுகிறது. அங்கே, ராக்கெட்டின் எரிபொருள் புகைத் தடங்கள் சூரியனின் ஒளியை பிரதிபலித்து, பனி போன்ற ஒளி வளையத்தை உருவாக்கும். இதை தான் Twilight Phenomenon என்கிறார்கள்.

இதனால், வானம் இருட்டாக இருந்தாலும், அந்த உயரத்தில் உள்ள புகைத் தடங்கள் பிரகாசமாகத் தெரியும். இதுவே UFO போல் தோற்றமளிக்கும்.

சமூக வலைதளங்களில் பரபரப்பு

    பலர் சமூக வலைதளங்களில் படங்கள், வீடியோக்களை பகிர்ந்து “மூனின் எதிர் பக்கத்தில், அமைதியாக நகரும் பிரகாசம்; விண்கல் அல்ல, விமானம் அல்ல, Starlink கூட அல்ல!” என்று பதிவிட்டனர்.

   அந்த இரவு வானம் உண்மையில் அற்புதமாக காட்சியளித்தது. ஆனால் அது வேறு கிரக வாசிகளின் வருகை அல்ல, மனிதர்களின் விண்வெளி தொழில்நுட்பத்தின் ஓர் அசுரன் போலிய செயல்பாடு தான். Vulcan Centaur ராக்கெட்டின் ஒளிக்கதிர், நம்முடைய வானத்தில் அறிவியல் மற்றும் கலை கலந்து உருவாக்கும் அழகிய ஓவியம் போல இருந்தது.

Post a Comment

0 Comments