Google Nano Banana – புதிய AI படத் திருத்த புரட்சி | Gemini 2.5 Flash

 🍌 Google "Nano Banana" – எதிர்கால படத் திருத்தத்தில் புரட்சி!

   “AI பட உருவாக்கம்” என்றாலே இதுவரை நாம் நினைத்தது — அழகான படம் கிடைக்கலாம், ஆனா அதுல consistency (ஒரே மாதிரி முகம், object, background) காப்பாற்றுவது கடினம்.

   ஆனா Google, தனது புதிய Nano Banana மாடல் மூலம் இந்த சிக்கலை உடைத்துவிட்டது. இது “Gemini AI” தளத்துக்குள் வந்திருக்கும் ஒரு சூப்பர் வேகமான படத் திருத்தம் + image editing tool.

Square icon featuring Google logo, a yellow banana illustration, blue AI badge, and text Nano Banana on an orange background

Nano Banana என்ன செய்கிறது?

  • ஒரே பாத்திரத்தை பல முறை காப்பாற்றும் திறன்-ஒரு மனிதர் / விலங்கு / object எப்படிச் சொன்னாலும், அந்த முகம், அந்த details எல்லாம் ஒரே மாதிரி அடுத்தடுத்த படங்களிலும் இருக்கும்.

உதாரணம்: நீங்க ஒரு ஹீரோ முகம் design பண்ணினீங்கனா, அவன் பல இடங்களில் — கடற்கரை, காடு, நகரம் — எங்க வைத்தாலும் ஒரே முகம் தான் வரும்.

  • Text-ல் சொன்னால் போதும்- “முகத்தில் சிரிப்பு சேர்க்க”, “வெளிச்சம் அதிகரிக்க”, “பின்னணியை புல்வெளியாக மாற்று” — இப்படிச் சொன்னாலே Nano Banana புரிந்து மாற்றி விடும். Photoshop மாதிரி layer-layer edit செய்ய வேண்டியதில்லை.
  • பல படங்களை இணைத்தல்-இரண்டு வேறு photos-ஐக் கொண்டு ஒரு புதிய காட்சி உருவாக்கலாம்.

Example: ஒரு குழந்தை photo + ஒரு playground photo கொடுத்தால், அந்தக் குழந்தை playground-ல் விளையாடுவது மாதிரி realistic படம் தரும்.

  • Speed-சாதாரண AI மாடல்கள் 10–15 விநாடி எடுத்துக்கொண்டாலும், Nano Banana 1–2 விநாடிகளில் முடிவு தரும். அதுவே இதன் பெரிய plus.

எங்கே பயன்படுத்தலாம்?

  • Gemini App (Mobile + Web) → direct users edit செய்யலாம்.
  • Developers → Gemini API, Google AI Studio, Vertex AI மூலமாக project-களில் integrate செய்யலாம்.
  • பொதுமக்கள் → personal photo editing, posters, social media creatives ஆகியவற்றுக்கு மிகவும் எளிமையான கருவி.

பாதுகாப்பு (Safety)

Google இதை வெளியிடும்போது சில தடைகள் + பாதுகாப்பு tech சேர்த்திருக்கிறது:

  • ஒவ்வொரு படத்திலும் visible watermark (AI-இல் உருவாக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டும்).
  • Invisible digital watermark (SynthID) → எங்கு பயன்படுத்தினாலும் அது AI-படம் என்று future-இல் கண்டுபிடிக்க முடியும்.

சவால்கள்

  • மிகச் சக்திவாய்ந்தது என்பதால் deepfake போன்ற ஆபத்தான பயன்பாடுகளுக்கும் வழிவகுக்கும்.
  • உண்மையும், கற்பனையும் பிரித்தறிவது கடினமா போகும் அபாயம் உள்ளது.

Nano Banana ஒரு சாதாரண AI image tool அல்ல.

  • இது கலைஞர்கள், designers, content creators, அத்துடன் சாதாரண பயனர்கள் அனைவருக்கும் ஒரு புதிய அனுபவத்தை தரப் போகிறது.
  • வேகம், எளிமை, consistency — மூன்றையும் சேர்த்து தரும் உலகின் முதல் tool என்பதால், இதை Google AI revolution-ல next step ஆகக் கருதுகிறது.

Post a Comment

0 Comments