Tea செயலி ஹேக்கிங் தாக்கம் – பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
Tea எனப்படும் பெண்களுக்கு மட்டும் உருவாக்கப்பட்ட சமூக செயலி, 2025 ஆம் ஆண்டு ஜூலை 25 அன்று ஒரு பெரிய தரவுசேதம் (Data Breach) சம்பவத்திற்குள்ளாகியுள்ளது. இதில் Tea செயலியில் பதிவு செய்த பயனர்களின் சுமார் 72,000 படங்கள், அதில் 13,000 தனிப்பட்ட முகபடங்கள் மற்றும் அரசு வழங்கிய அடையாள அட்டைகள் இணையத்தில் கசிய விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கசியல், Tea செயலியின் 2024 பிப்ரவரி மாதத்திற்கு முன் பதிவு செய்த பயனர்களை மட்டுமே பாதித்தது. ஆனால் தற்போதைய பயனர்களின் மின்னஞ்சல், கைபேசி எண்கள் போன்ற விவரங்கள் கசியவில்லை என்று Tea நிறுவனம் உறுதி செய்துள்ளது.
Tea செயலி 2023 இல் தொடங்கப்பட்டது. இது பெண்கள் தங்கள் முன்னைய அனுபவங்களை பகிர்ந்து, சந்தித்த ஆண்களை மதிப்பீடு செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இதில் “Red Flag” (எச்சரிக்கைக்கு உட்பட்டவர்) மற்றும் “Green Flag” (நல்லவர்) என வகைப்படுத்தும் வசதி இருந்தது. Tea விரைவில் அமெரிக்காவின் App Store-இல் #1 இலவச செயலி என்ற பெருமையை பெற்றது.
Tea செயலி ஆரம்பத்தில், பயனர்களிடம் முகபடம் மற்றும் அரசு வழங்கிய ID-ஐப் பெறும் நடைமுறை கையாளப்பட்டது. ஆனால், இந்த தரவுகள் சரியாக அழிக்கப்படவில்லை என்பதற்கான சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளன. தற்போது Tea நிறுவனம் அந்த நடைமுறையை நிறுத்தி விட்டதாகவும் கூறியுள்ளது.
இந்த ஹேக்கிங் தாக்கம், 4chan போன்ற இணைய குழுக்களில் Tea செயலியை குறிவைத்து வெளியிடப்பட்டு வந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் மூலம் பெண்கள் தகவல் திருட்டு, அடையாளத் திருட்டு, ஸ்டாக்கிங் போன்ற பல்வேறு ஆபத்துகளுக்குள்ளாக வாய்ப்பு உள்ளது.
Tea நிறுவனம் தற்போது மூன்றாம் தரப்பு சைபர் பாதுகாப்பு குழுவை நியமித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தரவுத்தொகுப்புகள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளுடன் மீளமைக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் கூற்றுப்படி, தற்போதைய பயனர்கள் பாதிக்கப்படவில்லை.
இந்த சம்பவம், பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட செயலிகளும் முழுமையான பாதுகாப்பு இல்லாமல் எளிதில் தாக்கப்படக்கூடியவை என்பதைக் காட்டுகிறது. கடந்த காலத்தில் சேமிக்கப்பட்ட தரவுகள் கூட, சரியாக அழிக்கப்படாவிட்டால் இது போன்ற பெரும் பிரச்சனைகள் உருவாகும்.
0 Comments